திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் இன்று (மார்ச் 9) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர்த்து அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் கமல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பியதால், கமல்ஹாசனுக்கு ராஜ்யசபாவில் இடம் கொடுக்கலாமா என்று ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி கமல் போட்டியிடும் தொகுதி எது? என்ற தலைப்பில் மின்னம்பலம் எலக்ஷன் ஃபிளாஷில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் 1 மணிக்கு சென்னை அறிவாலயத்திற்கு வந்தார்.
அப்போது, திமுக கூட்டணிக்காக நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதெனவும், 2025 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்வதெனவும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்…ராகுல் காந்தி தரும் 5 வாக்குறுதிகள்!