திமுகவின் கூட்டணியின் பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகள் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. மதிமுகவும் ஒரு லோக்சபா, ஒரு ராஜ்யசபா, தனிச்சின்னம் என்பதில் உறுதியாக நிற்கிறது. காங்கிரசும் எங்களுக்கு டபுள் டிஜிட்டில் தான் சீட்டு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் உள்ள சீனியர் அமைச்சர் ஒருவரிடம் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசும்போது, ஏன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இவ்ளோ இழுக்கறீங்க? மேற்கு வங்கத்துல மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்னு ஸ்ட்ராங்கா சொன்ன மாதிரி ஏன் உங்களால பேச முடியல? பயப்படுறீங்களா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் சொன்ன அமைச்சர், இப்படியே உசுப்பேத்தி பிரிச்சி விட பாக்குறீங்களா? ஒவ்வொரு தேர்தல்லயும் இந்த மாதிரிதான் பேச்சுவார்த்தை நடக்கும். அவங்க சைட்ல இருந்து கேக்குறத சொல்வாங்க. நாங்க எவ்ளோ கொடுக்க முடியும்னு சொல்வோம். கடைசியா தலைவர் பேசி கூட்டணியை முடித்து வைப்பார்.
இந்த கூட்டணியில் ஒரு சின்ன விரிசலோ, பிரிவோ வந்துவிடக் கூடாது என்பதில் தலைவர் உறுதியாக இருக்கிறார். திமுக கூட்டணி ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருப்பதா ஒரு இமேஜ் இருக்கிறது. ஒரு கட்சி கூட்டணியை விட்டு போனா கூட கூட்டணி வீக்கானது மாதிரி ஒரு இமேஜ் உருவாகிடும். கட்சி சின்னது, பெரியது அப்டிங்கிறதுலாம் தாண்டி கூட்டணி உறுதியா இருக்குற இமேஜ் டேமேஜ் ஆகிடும். அதனால இதையெல்லாம் பேசி சரி பண்ணிடுவோம் அப்டின்னு சிரிச்சிகிட்டே சொன்னாராம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: பாஜக எவ்ளோ ட்ரை பண்ணாலும் வாய்ப்பில்ல..கதவு, ஜன்னலை மூடிய எடப்பாடி
எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்