ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எதிரொலி: எதிர்க்கட்சிகள் போராட்டம்!

மின்துறை தனியார் மையம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் இன்று (அக்டோபர் 2) திமுக தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மின் துறையை, தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டரும் சமீபத்தில் விடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ம் தேதி முதல் புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக திமுகவினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.

எனினும், இன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த புதுச்சேரி மாநில காவல்துறை அனுமதி அளித்தது.

அதன்படி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் புதுச்சேரி பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. 

திமுக தலைமையில் போராட்டம்!

இதனை தொடர்ந்து மின்துறை தனியார்மையம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும் புதுச்சேரியில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக தலைமையில் நடைபெற்று வரும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுள்ளன.

மேலும் பல்வேறு கட்சிகளுடன் மின் துறை ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர், மற்றும் பொதுமக்கள் என சுமார் 1000க்கு மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

காமராஜர் சாலை முதல் அண்ணா சிலை வரை நடைபெறும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ’காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பா?’, ‘அமைதியான புதுவையில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பா?’ என்ற பாதகைகளை கையில் ஏந்தியபடி புதுச்சேரி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆர்எஸ்எஸ் ஊர்வல நாளில் மனிதச் சங்கிலி: விசிக-கம்யூனிஸ்டு அறிவிப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts