மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அதன்படி புதுச்சேரி, தமிழ்நாடு என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தருமபுரியிலும், விருதுநகரிலும் வாக்கு எண்ணிக்கையின் போது கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், இறுதியில் தருமபுரியில் திமுக வேட்பாளர் மணியும், விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூரும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களை சந்திக்க இன்று (ஜூன் 6) மாலை அண்ணா அறிவாலயத்துக்கு வருகைத் தந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெண்கள் மலர்தூவி வரவேற்க, ஆண்கள் திமுக கொடியை ஏந்தியவாறு நின்று வரவேற்பு அளித்தனர். பட்டாசு வாண வேடிக்கையுடன், மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலினை திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா உள்ளே அழைத்துச் சென்றார்.
தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள், இவர்களது வெற்றிக்காக வேலை செய்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் ஸ்டாலின் சந்தித்தார்.
திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன். ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், க. செல்வம், கதிர் ஆனந்த், ஆ. மணி, சி.என். அண்ணாதுரை. தரணிவேந்தன். மலையரசன், டி.எம். செல்வகணபதி, பிரகாஷ், கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி. அருண் நேரு, முரசொலி, தங்க தமிழ்ச்செல்வன், ராணி ஸ்ரீகுமார் ஆகியோரும்,
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி, சுதா, கே. கோபிநாத். விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத். சசிகாந்த் செந்தில், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் ஆகியோரும்,
வெற்றி வாகை சூடியவர்களும் அவர்களது வெற்றிக்கு அடித்தளமிட்ட உடன்பிறப்புகளும் அண்ணா அறிவாலயத்தில் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்! #DMKwins pic.twitter.com/AKxlke695O
— M.K.Stalin (@mkstalin) June 6, 2024
மதிமுக துரை வையாபுரி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன். வை. செல்வராஜ் ஆகியோரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தர்மபுரி… பாமகவின் வெற்றி மாங்கனி நழுவியது எப்படி?
கொலைகாரன் – விஜய் ஆண்டனி தந்த வித்தியாசமான படம்!
இதே உற்சாகம், களப்பணி என்றும் தொடரட்டும்