ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி கையெழுத்திடப்பட்ட மனு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில்லை என்பது ஆளும் கட்சியினரின் முக்கிய குற்றச்சாட்டு.
இந்நிலையில், “திமுக மற்றும் அதனுடன் ஒத்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்து,
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவைப் படித்துப் பார்த்து நவம்பர் 3க்குள் கையெழுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி 57 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார்.
இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக்கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட்ட மனு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அலுவலகத்தில் இன்று (நவம்பர் 9) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
சென்னை டூ கொல்கத்தா: தடம் புரண்ட ரயில்!
T20 WorldCup: இறுதிகட்டத்தில் உலகக்கோப்பை… மழை வந்தால் வெற்றி யாருக்கு?