திமுக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சிக்கல்!

அரசியல்

திமுகவின் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் செலவுகளை யார் செய்வது என்று பல தொகுதிகளில் சிக்கல்கள் எழுந்துள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்புக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கான செலவுகள், அந்த கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்வதற்கான செலவுகள், சுவரெழுத்து எழுதுதல், சின்னம் வரைதல் போன்றவற்றுக்கான செலவுகள் இப்படிப்பட்ட செலவுகளை எல்லாம் யார் செய்வது என்பதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளது.

திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் ஸ்மூத்தாக நடக்கிறது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களில் சிக்கல்கள் நிலவி வருகிறது.

விழுப்புரம் தொகுதி திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ரவிகுமார் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மார்ச் 23 சனிக்கிழமை அன்று வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ரவிகுமாரை அறிமுகம் செய்துவைத்து திமுக நிர்வாகிகள் பேசினார்கள்.

ரவிகுமார் கிளம்பியவுடன் திமுக ஒன்றியச் செயலாளர்கள், சேர்மேன்கள் என முக்கிய நிர்வாகிகளை கூப்பிட்டு மீட்டிங் போட்ட மாவட்டச் செயலாளர் புகழேந்தி, ”வேட்பாளருக்கு தேர்தல் செலவுக்கு பணம் எதுவும் நம்மால் கொடுக்க முடியாது. அதற்கெல்லாம் பணம் இல்லை. அமைச்சர் வழக்கிற்கே நிறைய செலவு செய்துவிட்டார். கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை ஓட்டுக்கு பணம் கொடுப்பது மட்டும்தான் நம்மால் கொடுக்க முடியும். மற்ற செலவுகளை வேட்பாளர் தான் செய்ய வேண்டும். நீங்க வேணும்னா தனிப்பட்ட முறையில் பானை சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

அதற்கு திமுக ஒன்றிய செயலாளர்கள் நாங்க எப்படி செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார்கள். அன்றே அமைச்சர் பொன்முடி பங்கேற்ற கூட்டமும் நடந்திருக்கிறது. அதில் பொன்முடி, எல்லா இடத்திலும் பானை சின்னத்தை நீங்களே வரைய முடிந்தால் வரையுங்க. தலைமையில் இருந்து எதையும் எதிர்பாக்காதீங்க என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் வழக்கமாக பிரியாணி போடப்படும். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலோ இப்போது சாப்பாடே சரியாக போடக் கூடிய நிலை இல்லையாம். திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு துரை வைகோ போட்டியிடுகிறார். அங்கு எல்லா கூட்டத்திற்கும் உணவு ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு தடபுடலாக ஏற்பாடு செய்வது வழக்கம். ஆனால் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் செயல்வீரர்கள் கூட்டத்தில் சாப்பாடு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதேபோல் திமுகவால் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளில் இப்படிப்பட்ட பிரச்சினை தொடர்ந்து வருவதாக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தியுடன் பேசி வருகிறார்கள். வேட்பாளர்களும் செலவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

20 யூனிட் ரத்தம்…ஸ்டாலின் கவலை…கணேசமூர்த்திக்கு என்னதான் நடந்தது?

அந்த 2 வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்? : செல்வப்பெருந்தகை பதில்!

”ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்” : உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *