இன்னும் 3 மாதத்தில் திமுக கூட்டணி உடையும்: ஜெயக்குமார் உறுதி!

Published On:

| By christopher

dmk alliance will be broke

dmk alliance will be broke

இன்னும் 3 மாதத்தில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை இன்று (நவம்பர் 27) சந்தித்து அவர் பேசுகையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா 69% இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படக்கூடாது என்று அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவை சந்திக்க அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே விமானத்தில் அழைத்துச் சென்றார்.

சுமார் ஒரு மணி நேரம் பிரதமரிடம் 69% இடஒதுக்கீடு முறை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர் எடுத்துரைத்தார். அந்த அழுத்தத்தில் தான் 69% இடஒதுக்கீடு உறுதியானது.

இப்படி சமூக நீதியை காத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்று சமூக நீதி பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் செயலில் காட்ட மறந்துவிட்டார்.

வேங்கைவயல் சம்பவம் நடந்து 180 நாட்களை கடந்தும் கூட இன்று வரை அவரால் குற்றவாளியை கண்டுபிடிக்க  முடியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக இன்று கிரீன்வேஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். திமுகவில் உதயநிதிக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அதே குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி எம்.பியை தலைவராக ஆக்க வேண்டியது தானே?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடியப் போகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாக கூறுவது சுத்த கற்பனை. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 கோடிக்கு அதிகமான தொண்டர்களுடன் கட்சி எழுச்சியுடன் உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி என்பது இப்போதும் எப்போதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி அதிமுக நோக்கி வரும். அதனால் இன்னும் 3 மாதத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயமாக அமையும்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வீட்டுக்குள் புகுந்து மூன்று வயது குழந்தையை கடித்து குதறிய 3 தெரு நாய்கள்!

தயாரிப்பாளராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ்… லோகோவை கவனிச்சீங்களா?

dmk alliance will be broke