திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் எனப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக அனைத்து அணிகளின் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து, தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
மோனிஷா
இந்தியாவில் உருமாறிய கொரோனா: அச்சத்தில் மக்கள்!
”முட்டை விற்க செல்லுங்கள்…” இந்திய வீரர்களை எச்சரித்த கபில்தேவ்