டிச. 24: திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்!

அரசியல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர். இதற்கான நியமன பட்டியலையும் திமுக தலைமை வெளியிட்டிருந்தது.

தற்போது, திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகளின் கூட்டம் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் எனப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

dmk all team members meet at anna arivalayam on december 24

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் 24 (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.

அப்போது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

‘கோவிட் நடைமுறையை பின்பற்றுங்கள் இல்லை யாத்திரையை ஒத்தி வையுங்கள்’: மன்சுக் மாண்டவியா

அதிமுகவில் இடைச்செருகல்களை நீக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *