நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு அனைத்துக் கட்சிகளும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆயத்தமாகி வருகின்றன. 2026 தேர்தலில் புது வரவாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் குதித்துள்ளது. இதனால் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்தநிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (நவம்பர் 2) தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது, 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று தகவல்கள் வருகிறது.
இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், வரும் 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடேங்கப்பா… அக்டோபர் மாதத்தில் இத்தனை லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனையா?
“மாநில மொழிகள் உயிரோடு இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கம்”… கேரளாவில் உதயநிதி பேச்சு!