தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமை கழகம் இன்று (நவம்பர் 20) தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த நவம்பர் 18-ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூச்சுவிடுவதில் அவருக்கு லேசான சிரமம் இருப்பதால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில் விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.
செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை: மகளிர் ஆணையம் பரிந்துரை!
நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!