விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… தேமுதிக புறக்கணிப்பு : காரணம் என்ன?

அரசியல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூன் 16) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Image

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜூன் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது.

இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது.

காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள் இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது.

இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிகப் பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர். எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” இவ்வாறு பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கோடி : விமர்சனம்!

இடைத்தேர்தல் : வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகங்கள்… பட்டியலிட்ட ராமதாஸ்

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *