ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் என்பவரை அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜனவரி 23) நடைபெற்றது.
இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் பிரமேலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும், வேட்பாளராக ஆனந்த் என்பவர் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்றும் பிரேமலதா அறிவித்துள்ளார்.

அறிவிக்கப்படாத அதிமுக வேட்பாளர்
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக, பாஜக தரப்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
நாதக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ”இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என்று டிடிவி தினகரன் நேற்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமமுக உடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்தித்த தேமுதிக, தற்போது இடைத்தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
இடைத் தேர்தல் செலவுக்கு சீமான் போடும் திட்டம்!
“கை கொடுப்பதோடு, வாக்கும் சேகரிப்பார் கமல்”- இளங்கோவன் நம்பிக்கை!