ரஷ்ய மூத்த அதிகாரிகள் புதினை அதிபர் பொறுப்பில் இருந்து மாற்றுவது குறித்து தீவிரமாக விவாதித்து வருவதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் முடிவதற்குள்ளாகவே புதின் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் புதினை ஆட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஏற்கனவே விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு உளவுத் துறைத் தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் போர்க்களத்தில் ரஷ்யா தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில்,
நவம்பர் இறுதிக்குள் கெர்சனை மீண்டும் கைப்பற்றும் இலக்கை உக்ரைன் கொண்டுள்ளதாகவும் 2014இல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியாவை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் புடானோவ் தெரிவித்துள்ளார்.
-ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…
கொட்டும் மழை : எங்கெங்கு விடுமுறை?