இன்னும் எத்தனை காலம் இப்படி பேசுவீங்க? : எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய இயக்குநர்

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நேற்று(பிப்ரவரி 15) பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு இயக்குநர் நவீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

அதேவேளையில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து நேற்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு ஈரோட்டில் சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி நேற்று மாலை வீரப்பம்பாளையம் என்ற பகுதியில் எடப்பாடி பேசும்போது திமுக ஆட்சிகுறித்த விமர்சனங்களை தரக்குறைவாகவும், காட்டமாகவும் முன்வைத்தார்.

அவர் பேசுகையில், “ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமரவைத்துள்ளனர்.

நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

அதிமுகவை எதிர்க்க தெம்பு, திராணி, சக்தி இல்லை. அதனால், ஏழை மக்களை 120இடங்களில் கொட்டகை அமைத்து அமரவைத்துள்ளனர்.” என்று பேசினார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு மூடர்கூடம், கொளஞ்சி ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் நவீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு.

உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்துசென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?

இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பேஸ்புக்கில் காரசார பதிவுகள்… நடிகர் ராஜ்கிரணுக்கு கொலை மிரட்டல்?

தென்காசி வழக்கு: கிருத்திகா வைத்த சஸ்பென்ஸ்! ஏமாற்றத்துடன் சென்ற காதல் கணவர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts