அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கழக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்த போது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
தற்போது, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
தொலைதூர கல்வியில் முறைகேடு: பல்கலைக்கழக ஊழியர்கள் டிஸ்மிஸ்!
டிஜிட்டல் திண்ணை: பிடிஆருக்கு எதிராக திரளும் அமைச்சர்கள்- என்ன செய்வார் ஸ்டாலின்?