நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!

அரசியல்

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

திண்டுக்கல்

திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சச்சிதானந்தம் 4,43,821 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் முபாரக்கை தோற்கடித்தார்.

1,12,503 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் திலகபாமா மூன்றாவது இடத்தையும், 97,845 வாக்குகள் பெற்று நாதக வேட்பாளர் கலில் ராஜன் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.

மதுரை

மதுரை தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ள சு.வெங்கடேசன் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை விட 2,09,409 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

2,04,804 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரவணன் மூன்றாவது இடத்தையும், 92,879 வாக்குகளுடன் நாம் தமிழர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 4,72,739 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட அருணாச்சலம் 3,46,811 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது இடங்கள் முறையே 1,85,322 வாக்குகளுடன் பாஜக ஏபி முருகானந்தமும், 95,726 வாக்குகளுடன் நாதக சீதாலெட்சுமியும் பெற்றுள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 2,08,957 வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

செல்வராஜ் 4,65,044 வாக்குகள் பெற்று முதலிடத்திலும், தொடர்ந்து சுர்சித் சங்கர் 2,56,087 வாக்குகள், நாதக வேட்பாளர் கார்த்திகா 1,31,294 வாக்குகள் பெற்றுள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீலகிரி: அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி!

பெரம்பலூர்: அருண் நேரு அமோக வெற்றி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *