வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றிய சில இன்பாக்ஸ் மெசேஜ்கள் வந்து விழுந்தன. Ministers who did not cooperate with the conference
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“நவம்பர் 27ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய பிறந்தநாள். அன்று சமூக நீதி காவலர் என்று இந்திய அளவில் பாராட்டப்படும் முன்னாள் பிரதமர் வி. பி. சிங்கின் சிலை திறப்பு விழா சென்னையிலே நடைபெற இருக்கிறது.
அதற்கு முதல் நாள் நவம்பர் 26 ஆம் தேதி காலை சென்னை தியாகராய நகர் அக்கார்டு ஹோட்டலில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. வழக்கமாக கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அங்கே புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அக்கார்டு ஹோட்டலில் நடைபெறுகிறது. ஏற்கனவே கலைஞர் திமுக தலைவராக இருந்தபோது ஒருமுறை இதே அக்கார்டு ஹோட்டலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இது விஷயம் அல்ல.
திமுக வரலாற்றில் முதல் முறையாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓர் அணியின் மாநிலச் செயலாளரும் மற்றும் அந்த அணியின் அனைத்து மாநில துணைச் செயலாளர்களும் பங்கேற்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறக்கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் அஜெண்டா என்பது சேலம் இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு மற்றும் பாகப் பொறுப்பாளர்கள், பூத் பொறுப்பாளர்கள் பணிகள் என்று பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனே அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையே அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு இளைஞர் அணி மாநாட்டுக்கு தயார் செய்வதற்காக, மாவட்ட வாரியாக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டங்களை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டிலும் அதன் பின் மாநாடு நடைபெற இருக்கும் சேலம் மாவட்டத்திலும் இளைஞர் அணி செயல்வீர்கள் கூட்டத்தை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டமாக செல்லும் பொழுது அங்கே இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்களிடம், ‘மாநாட்டுக்கு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு உள்ளது?’ என்று தனிப்பட்ட முறையில் கேட்டு தெரிந்து கொள்கிறார்.
இளைஞர் அணியின் பல மாவட்ட அமைப்பாளர்கள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக சொன்னாலும்… கணிசமான இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் தங்களது மாவட்ட செயலாளர்களிடமிருந்து உரிய ஒத்துழைப்பு இல்லை என்று எதார்த்த நிலையை உதயநிதியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் மாநாட்டு நிதி வசூலில் கூட மாவட்ட செயலாளர்களின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள், இதை எல்லாம் கேட்டுக்கொண்டு சென்னை திரும்பிய உதயநிதி இது பற்றி கட்சி தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடமும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த பின்னணியில் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்… அதுவும் குறிப்பாக இளைஞர் அணியின் மாநில மாநாடு பற்றி விவாதிக்கக் கூடிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் அணியின் செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் அவருடைய இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளராக இருக்கக்கூடிய 9 பேரையும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பது என்று திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து இளைஞர் அணி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘மாவட்ட வாரியாக இளைஞர் அணி அமைப்பாளர்கள் உதயநிதியிடம் தெரிவித்த நிறை குறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று இதுபற்றி எடுத்துரைக்க உதயநிதி விரும்பினார். அதன் அடிப்படையில் இளைஞரணி செயலாளர் மற்றும் 9 துணை செயலாளர்கள் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளார்கள். திமுக வரலாற்றில் இது மிக அரிதான நிகழ்வு.
மாவட்ட செயலாளர்கள் கூட்ட த்தில் கலந்து கொண்ட பிறகு அன்று மாலையே அன்பகத்தில் இளைஞர் அணியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தையும் கூட்டி விவாதிக்க இருக்கிறார் உதயநிதி’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்’’
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முன்னாள் டிஜிபி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து 24 வயது பெண் மருத்துவர் மரணம்… சென்னையில் அதிர்ச்சி!
Ministers who did not cooperate with the conference
ரொம்ப முக்கியம்..