டிஜிட்டல் திண்ணை: 15 நாட்களில் 100 கோடி… அண்ணாமலை டார்கெட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்ஸில் ஒரு கியூ ஆர் கோடு படம் வந்து விழுந்தது. அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் நிதி வருவாயை பெருக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுத் தேர்தலுக்கு செலவு செய்வதற்காக தொழிலதிபர்கள், வியாபாரிகள், பல்வேறு விஐபிகளிடம் இருந்து தேர்தல் நிதியை பெறும் நடவடிக்கைகளை முக்கிய அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

இந்த வகையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி நிதி சேகரிப்பு இயக்கம் என்ற பெயரில் நிதி வசூலை தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் மற்றும் கோட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில்,  தான் மேற்கொள்ள இருக்கும் பாதையாத்திரை மற்றும் கட்சி வளர்ச்சி நிதி ஆகிய இரண்டு விஷயங்களை பற்றி தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கியத்துவம் கொடுத்து பேசியுள்ளார்.

அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை கட்சி வளர்ச்சி நிதி சேகரிப்பு இயக்கத்தை பாஜக நடத்துகிறது. இந்த அடிப்படையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், கோட்ட பொறுப்பாளர்கள், பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நிதி டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரவர் பதவிக்கேற்ப ஒரு கோடி ரூபாய் , 75 லட்சம் ரூபாய், 50 லட்சம் ரூபாய், 25 லட்சம் ரூபாய் என்று டார்கெட் பிக்ஸ் பண்ணி இருக்கிறார் அண்ணாமலை.  இந்தத் தொகையை தொழிலதிபர்கள், வியாபாரிகள், தங்கள் பகுதி பிரமுகர்கள், தங்கள் பகுதி மக்கள் ஆகியோரிடம் இருந்து வசூலித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகிகளுக்கு அண்ணாமலை இட்டிருக்கும் கட்டளை.

ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி மீது தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஏராளமான கோடி ரூபாய்களை தேர்தல் நிதியாக பெற்றிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது அதானி விவகாரம் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை கொடுத்து, அதன் பிரதிபலனாக தனது கட்சிக்கு பெருமளவிலான கோடிகளை பாஜக சேர்த்து விட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த அரசியல் சூழலில் தமிழ்நாடு பாஜக கட்சி வளர்ச்சி நிதி சேகரிப்பு இயக்கம் என்ற பெயரில் வசூலை தொடங்கி இருக்கிறது. இதற்காக நிர்வாகிகளுக்கு ரசீது புக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை கரன்சி நோட்டுகளாக கொடுக்க முடியவில்லை என்றாலும் டிஜிட்டல் வழியாக நிதி வசூல் செய்யலாம் என்றும் அதற்காக தமிழக பாஜகவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கியூ ஆர் கோடையும் நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார் அண்ணாமலை. பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் தமிழக பாஜகவுக்கு 100 கோடி ரூபாய் நிதி திரட்ட வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் அஜெண்டா. இதை நோக்கி தமிழக பாஜக நிர்வாகிகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது  வாட்ஸ் அப்.

100 பில்லியன் டாலரை இழந்த கூகுள்: செய்த தவறு என்ன?

ராகவா லாரன்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல பாடலின் ’ரீமிக்ஸ்’!

நேரு பெயரைப் போட என்ன வெட்கம்?: காங்கிரஸுக்கு மோடி கேள்வி!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *