admk plan to attack ops on jayalalitha death anniversary

டிஜிட்டல் திண்ணை: ஜெ.நினைவு நாள்… அதிமுக ப்ளான் – பன்னீருக்கு ஆபத்து!

அரசியல்

admk plan to attack ops on jayalalitha death anniversary

வைஃபை ஆன் செய்ததும் 5 மாநில எக்ஸிட் போல் முடிவுகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அது பற்றிய செய்திகளை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

”வரும் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான  ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது. இதை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாரப்பூர்வ அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமற்ற அதிமுக வரை நான்கு பிரிவுகளாக சென்னை மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்திருக்கிறார்கள்.

தற்போதைய அதிகாரபூர்வ அதிமுகவான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சார்பிலும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பிலும், இன்னமும் தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா சார்பிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த தனித்தனியாக நேரம் கேட்டு சென்னை மாநகர காவல் துறையிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

admk plan to attack ops on jayalalitha death anniversary

இவர்களுக்கு எந்தெந்த நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கொடுக்கலாம் என்று சென்னை மாநகர காவல் துறையினர் தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த முறை பெரிய தொண்டர் கூட்டத்தோடு மெரினாவுக்கு செல்ல வேண்டும் என்று சென்னை அதன் சுற்றுப்புற மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள 15 மாவட்ட கழக அமைப்புகள் சார்பில் ஒவ்வொரு மாவட்டமும் தலா ஆயிரம் பேர் என 15 ஆயிரம் பேரை கூட்டிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் தற்போது அதிமுக கரைவேட்டி கட்டக் கூட உரிமையில்லாமல் இருக்கிறார். அவர் தன்னுடைய தொண்டர் பலத்தை காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் பெரிய கூட்டத்தை திரட்ட தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இவர்களுக்கிடையே சசிகலாவும் மெரினாவுக்கு சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

இந்த நிலையில் உளவுத்துறை மூலம் சென்னை மாநகர காவல் துறைக்கு கிடைத்திருக்கிற ஒரு தகவல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதாவது கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று தேவர் குருபூஜையை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார். அங்கே மரியாதை செலுத்தி விட்டு திரும்பும் போது பசும்பொன் குளம் அருகே எடப்பாடி பழனிச்சாமியின் கார் கடந்து செல்கிற நேரத்தில் அவரது கார் மீது கற்களும் செருப்பும் வீசப்பட்டது. இது அங்கே பதற்றத்தை உண்டு பண்ணியது. எடப்பாடி பழனிசாமி முக்குலத்து மக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக பன்னீர் ஆதரவாளர்களும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் இந்த சம்பவத்தை நடத்தி உள்ளனர் என்று அதிமுகவினர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள்.

admk plan to attack ops on jayalalitha death anniversary

எடப்பாடி மீது செருப்பு வீசிய சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்று பன்னீர் செல்வம் சொல்லியிருந்தார். இதுகுறித்து அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘பன்னீர்செல்வம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவார். அவரது இரட்டை வேடத்தை நாங்கள் நம்ப மாட்டோம்’ என்று கூறினார்.

இப்படிப்பட்ட பின்னணியில் பசும்பொன் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பன்னீர்செல்வம் டிசம்பர் 5 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு வரும்போது அவர் மீது பசும்பொன் பாணியில் அட்டாக் நடத்துவதற்கு அதிமுகவின் சென்னை பொறுப்பாளர்கள் சிலரும் மத்திய மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரும் திட்டமிட்டு இருப்பதாகவும்… அது தொடர்பாக தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து அதை சென்னை மாநகர காவல் துறைக்கு பாஸ் பண்ணி உஷார் படுத்தியிருக்கிறது.

இதையடுத்து டிசம்பர் 5ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய நால்வருக்கும் எந்தெந்த நேரத்தில் அனுமதி கொடுப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறது சென்னை மாநகர காவல்துறை ” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கனமழையிலும் பணியில்… சென்னை மாநகராட்சிக்கு அண்ணாமலை பாராட்டு!

டி20 உலகக்கோப்பையில் முதன்முறையாக கால்பதித்த உகாண்டா!

இனி ‘லவ்வர்’ மணிகண்டன்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

admk plan to attack ops on jayalalitha death anniversary

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *