நாட்டிற்கு எதிராகவும், அவமதிக்கும் வகையிலும் நான் எதுவும் பேசவில்லை என்று ராகுல் காந்தி எம்.பி கூறியுள்ளார்.
லண்டன் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.
அப்போது அவர், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், தான் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே , ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளிலேயே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
இந்நிலையில், லண்டன் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய ராகுல் காந்தி இன்று (மார்ச் 16 ) நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நாட்டிற்கு எதிராகவும், அவமதிக்கும் வகையிலும் நான் எதுவும் பேசவில்லை. என்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால் இது குறித்து நான் பதிலளிப்பேன்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேசும் மனநிலையில் இல்லை: வீடு தாக்குதல் குறித்து திருச்சி சிவா
50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்: அன்பில் மகேஷ் விளக்கம்!