ஜெயா டிவியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக்கின் மனைவி கீர்த்தனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல் நவம்பர் 10 ஆம் தேதி காலையில் இருந்தே ஜெயா டிவி ஊழியர்கள் வட்டாரத்தில் சலசலப்பாக பேசப்பட்டது.
என்ன நடந்தது விவேக் இல்லத்தில்? விசாரித்தோம்.
“சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் -இளவரசி தம்பதியரின் மகன் விவேக். இவருக்கும் கீர்த்தனாவுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவ்வப்போது குடும்ப வாழ்வில் இருவருக்கும் இடையே பிரச்சினை வெடிப்பதும் அதை அப்போது சிறையில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோரின் கவனத்துக்கு செல்வதும் அவர்கள் விவேக்கை கூப்பிட்டு அறிவுரை வழங்கியதும் தொடர்கதையானது.
இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் சொகுசு பங்களாவில் வசித்து வந்தாலும் விவேக் அவரது மனைவி கீர்த்தனா ஆகியோருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த பின்னணியில் நவம்பர் 9 ஆம் தேதி இரவும் விவேக்குக்கும் அவரது மனைவிக்கும் வாதப் பிரதிவாதங்கள் முற்றின.
இந்த நிலையில் உச்சகட்ட மன வருத்தம் அடைந்த கீர்த்தனா தூக்க மாத்திரை உள்ளிட்ட வேறு ஏதோ மாத்திரைகளை நிறைய எடுத்து விழுங்கிவிட்டார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கீர்த்தனா தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று அவரது குடும்பத்தில் தகவல் பரவியது.
பட்டினப்பாக்கம் போலீஸாருக்கும் இதுகுறித்து தகவல் வந்து வழக்கு ஏதும் பதியாமல் விசாரித்தனர். அப்போது, ‘விவேக் -கீர்த்தனா இடையே சமீப காலமாக நடந்து வந்த பிரச்சினைக்கு காரணம் ஒரு பெண் பைக் ரேஸர்தான் என்று தெரியவந்துள்ளது.
பெரிய இடத்து பிரச்சினையை பேசி முடிச்சுக்கங்க சார் என்ற ரீதியில் போலீஸார் கூறியுள்ளனர்’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
அதேநேரம் இன்று (நவம்பர் 11) கீர்த்தனாவின் பிறந்தநாளை ஒட்டி விவேக்கும் கீர்த்தனாவும் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியதாக சில போட்டோக்கள் ஜெயா டிவி ஊழியர்களின் வாட்ஸ் அப்பில் இருந்து பரவி வருகின்றன.
இருவரும் ஒற்றுமையோடு நன்றாக இருந்தால் சரிதான்.
–வேந்தன்
10% இட ஒதுக்கீடு : சட்டத்தை உருவாக்கியதே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான்!
சிறையில் இருந்து விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்