பாரதியார் மருமகனை சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர்!

அரசியல்

வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இல்லத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (நவம்பர் 18) நேரில் சென்று பாரதியாரின் மருமகனைச் சந்தித்தார்.

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் நாளை (நவம்பர் 19) தொடங்கி நடைபெறவுள்ளது.

காசி தமிழ் சங்கம தொடக்க நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கவுள்ளார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்கவிழா நடைபெற இருக்கிறது.

நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் இந்த சங்கம நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலிருந்து முதலாவது ரயில் நேற்று (நவம்பர் 17) காசிக்கு புறப்பட்டுச் சென்றது.

Dharmendra Pradhan meets mahakavi bharathiyar son in law

இந்த நிலையில், வாரணாசி சென்றுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று அங்கு கங்கை நதியின் அனுமன் படித்துறையையொட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்தைப் பார்வையிட்டார்.

அங்கு பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணனை சந்தித்து பாரதியாரின் நினைவுகள் குறித்துக் கலந்துரையாடினார்.

மோனிஷா

ரசாயன வாயு தாக்கி 25 மாணவிகள் மயக்கம்!

5வது விபத்து: வந்தே பாரத்துக்கு தொடர் சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *