தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிலுவையில் இருக்கும் கல்வி நிதி விடுவிக்கப்படும்” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். dharmendra pradhan denied tn fund
மத்திய கல்வி அமைச்சக ஏற்பாட்டின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 15) தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்கப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசியை சென்றடைந்தது.
நான்கு நாட்கள் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மாலை தொடங்கி வைத்தார். இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் விழாவில் பங்கேற்ற தர்மேந்திர பிரதானிடம், ”தமிழ்நாட்டிற்கு ரூ.2152 கோடி கல்வி நிதி வழங்காதது ஏன்?” என்று குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி! dharmendra pradhan denied tn fund
அதற்கு அவர், “தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி நிலுவையில் இருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் அரசியல் காரணத்திற்காக புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். மற்ற மாநிலங்கள் அதனை ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?
மும்மொழிக் கொள்கையில் தமிழை படிக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை படித்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் இருமொழி கொள்கை என்று தமிழக மக்களை குழப்புகிறது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழக அரசுக்குரிய கல்வி நிதி விடுவிக்கப்படும்” என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.