தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி முதல் சுற்று முடிவில் முன்னிலை பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பிடித்த பாமக 10 தொகுதியில் போட்டியிட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தருமபுரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மனைவி பசுமைத் தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து முதல் சுற்று வாக்கு முடிவு வெளியாகியுள்ளது.
அதில் செளமியா அன்புமணி 5,801 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.மணி 2,161 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆ.அசோகன் 1,855 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 407 வாக்குகள் பெற்றுள்ளார்.
தருமபுரி பாமக நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளது பாமக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை : முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை!
தபால் ஓட்டு நிலவரம் : நெல்லையில் பாஜக முன்னிலை!