தருமபுரி மக்கள் டாஸ்மாக் கடையை கேட்கவில்லை : அன்புமணி ராமதாஸ்

அரசியல்

தருமபுரி கிராம மக்கள் ‘சந்து கடைகளை’ மூடதான் வலியுறுத்தினார்கள். டாஸ்மாக் கடைகளை அமைக்க கோரவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

அப்போது ஆதனூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கோரி மனு கொடுத்தனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளானது. டாஸ்மாக் வேண்டும் என்று மனு கொடுத்த பெண்கள் இன்று (ஆகஸ்ட் 13) கூறுகையில், “ காசு கொடுத்து எங்கள கூட்டிட்டு வந்து இப்படி சொல்ல வச்சிட்டாங்க. எங்களுக்கு டாஸ்மாக் வேணாம்” என மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானதாகும்.

வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுப்பதாகக் கூறி, மக்களை பணம் கொடுத்து அழைத்துச் சென்று, டாஸ்மாக் கடை கோரும் மனுவை ஏமாற்றி கொடுக்க வைத்துள்ளனர். இது கண்டனத்துக்குரிய செயல்.


தருமபுரி மாவட்டத்தில் ‘சந்து கடை’ என்கிற பெயரில் ஏராளமாக நடந்துவரும் சட்டவிரோத சாராயக் கடைகளைத் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை திறக்குமாறு யாரும் கேட்கவில்லை” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

GOAT Trailer : அப்டேட்-க்கு ஒரு அப்டேட் ஆ… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!

அடியோஸ் அமிகோ: விமர்சனம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *