தர்மபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
காவிரி உபரிநீரைத் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்களில் நிரப்ப வலியுறுத்தி,
தனது பிரச்சார நடைப் பயணத்தை ஒகேனக்கலிலிருந்து இன்று (ஆகஸ்ட் 19) தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி, சோலைக்கொட்டாய், கடத்தூர், கம்பை நல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,
என அடுத்தடுத்த ஊர்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், தர்மபுரி காவிரி உபரிநீர் திட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளார்.
இந்த நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளைக் கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அன்புமணி ராமதாஸ், தர்மபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பிரியா
ஹைட்ரோ கார்பன் திட்டம்: தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்