தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி : ஏலம் எடுத்த அதானி

அரசியல்

தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான ஏலத்தை அதானி நிறுவனம் இன்று (நவம்பர் 29) கைப்பற்றியுள்ளது.

உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாக மஹாராஷ்டிராவில் உள்ள தாராவி உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் நிலையில் 58,000 குடும்பங்களும், 12,000 நிறுவனங்களும் உள்ளன.

தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கும் தாராவியில் ஆஸ்கர் விருதுபெற்ற ஸ்லம்டாக் மில்லினர், நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா போன்ற திரைப்படங்கள் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தன.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியை மறுசீரமைக்க மஹாராஷ்டிரா அரசு முயற்சி செய்து அதற்காக 4 முறை ஏலம் விடப்பட்டது. ஆனால் சிக்கல் நிறைந்த நிர்வாக, அரசியல் காரணங்களால் பல ஆண்டுகளாக தடைப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தர்போதைய அரசு, இந்த முயற்சியில் மீண்டும் இறங்கியது.

சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆரம்ப கட்ட முதலீடாக அதிகளவு பணத்தை முதலீடு செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.

அதன்படி தாராவி மறுசீரமைப்பு ஏலத்தை கடந்த அக்டோபர் 1ம் தேதி திறந்துவிட்ட அரசு, 11ம்தேதி நிறைவு செய்தது.

ஏலத்தில் தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த நிறுவனங்கள் உட்பட எட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால் அதானி, டிஎல்எப் மற்றும் நமன் குரூப் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கெடுத்தனர்.

இந்நிலையில் ஒப்பந்த புள்ளிகள் மீதான ஆய்வு இன்று நடைபெற்றது. அதில் ரியல் எஸ்டேட் டெவலப்பரான நமன் குரூப் தகுதிபெறவில்லை என்பது தெரியவந்தது.

அதேவேளையில் ஒப்பந்தத்தைப் பெற தாராவி மறுசீரமைப்புக்கு முதல்கட்டத்திற்காக ரூ. 5,069 கோடி குறிப்பிட்ட அதானி நிறுவனம் ஏலத்தை கைப்பற்றியது.

டிஎல்எஃப் நிறுவனம் ₹ 2,025 கோடியை மேற்கோள் காட்டியிருந்தது.

இதுகுறித்து திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்விஆர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “நாங்கள் இப்போது அரசாங்கத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட விவரங்களை அனுப்புவோம். ஏக்நாத் ஷிண்டே அரசு அதனை 2 வாரங்களில் அங்கீகரிக்கும்” என்று கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

லீவும் இல்ல பர்மிஷனும் இல்ல… போலீஸ் குமுறல்: என்னாச்சு டிஜிபி உத்தரவு?

டிஜிட்டல் திண்ணை: ஜெ. நினைவு தினம்- தள்ளிப்போன பொதுக்குழு வழக்கு: எடப்பாடி ஷாக்!

+1
0
+1
1
+1
1
+1
3
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *