மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று (டிசம்பர் 5) பதவி ஏற்றார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கொண்ட கூட்டணியான மகாயுதி வெற்றி பெற்றது.
288 தொகுதிகளில் 230 இடங்களை இந்த கூட்டணி பிடித்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக 132 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற இழுபறி சுமார் 10 நாட்களாக நீடித்தது.
ஒருவழியாக நேற்று பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக ஃபட்னாவிஸ் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக மத்திய குழு ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் நேற்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.
அப்போது ஃபட்னாவிஸ் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இன்று மும்பை அசாத் மைதானில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்றார்.
முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி ஏற்றார். அஜித் பவாரும் துணை முதல்வராக பதவி ஏற்றார். அவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
40000 பேர் அமரும் வகையில் நிகழ்ச்சி மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 2000 இருக்கைகள் விவிஐபிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“என் பையன் எனக்கு வேணும்”- தன்னிலை மறந்து கதறிய தாய்!
சாம்சங் தொழிலாளர்கள் சங்க விவகாரம் : பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!