அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்கக்கூடிய பசும்பொன்னுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அவர் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் இன்று (அக்டோபர் 26) வெளியிடப்பட்ட அறிக்கையில்,
“தேவர் திருமகனாருடைய 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசத்தை தங்கள் தரப்பிடம் வழங்க கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இந்தநிலையில், தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாதது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் கார்கே
“தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்” – இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு!