முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா இன்று (அக்டோபர் 30) காலை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் 10000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னுக்கு வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தார்.
ஆனால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
அவருக்கு பதிலாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பசும்பொன்னுக்குச் செல்வதற்கு முன்னதாக இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, ராஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பிரியா
தேவர் ஜெயந்தி விழா: போக்குவரத்து மாற்றம்!
தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் உதயநிதி