’ஆகஸ்டு 19க்குப் பின் துணை முதல்வர் உதயநிதி’: அமைச்சர் கண்ணப்பன் கிளப்பிய சலசலப்பு!

Published On:

| By christopher

Deputy Chief Minister Udayanidhi Stalin: The minister's speech caused an uproar!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி உதயநிதி துணை முதல்வர் ஆகக் கூடும் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறப்படுவதாக கடந்த 6ஆம் தேதி நமது மின்னம்பலம் தளத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணை: பழுப்பது நிச்சயம்… ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் கோவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கி வைத்தார்.

அதன் ஒருபகுதியாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்ட விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சாரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வகிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ச்சி திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

பின்னர் சட்டென சுதாரித்துக்கொண்டு, “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதியை துணை முதல்வர் எனக் கூற வேண்டும். அதுக்கு முன்னாடி சொல்லக்கூடாது” என சிரித்துக்கொண்டே தனது பேச்சைத் தொடர்ந்தார்.

ஏற்கெனவே தமிழக அரசியல் களத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது குறித்த பேச்சு பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நமது மின்னம்பலம் தளத்திலும் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்துகிறார்” : தங்கர் மீது ஜெயா பச்சன் குற்றச்சாட்டு!

வில்லனாகும் லோகேஷ் கனகராஜ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment