துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி 28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல இருக்கிறார் அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே திமுக இளைஞரணி மாநாட்டுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
அதேசமயம் முதல்வர் வெளிநாடு சென்று மீண்டும் சென்னை திரும்பும் வரை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதுதான் திமுக உயர் மட்ட வட்டாரத்தில் விவாதித்துக் கொள்ளும் விஷயமாக இருக்கிறது.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில் உதயநிதி… துணை முதல்வருக்கு முன்பே பொறுப்பு முதல்வர் என்ற தலைப்பில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 11) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதலமைச்சர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “ஆமா… ஆமா… எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருக்கப் போகிறோம் அவ்வளவுதான்” என்று ஒரே வரியில் கூலாக பதில் அளித்துவிட்டு சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
திமுகவுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பிரேமலதா
பெண் குழந்தை பிறப்பதற்கு யார் காரணம்?: நீதிமன்றத்தில் வகுப்பெடுத்த நீதிபதி!