உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அறிவிப்பு நாளையே கூட வெளியாகலாம் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. நேற்று காலை 11.30 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், நாளை வெள்ளிக் கிழமை – செப்டம்பர் 20 ஆம் தேதி உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று திமுகவின் தலைமைக் கழகத்தில் சொல்கிறார்கள். இதுகுறித்து மின்னம்பலத்தில் “செப்டம்பர் 20 வெள்ளி… உதயநிதி உயர்வுக்கு தேதி குறித்த பின்னணி!” என்ற தலைப்பில் நேற்று வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “உண்மையில் அறிவிப்பு வரும். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பார்.
அவர் துணை முதல்வராவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில், ஏன் நாளையே அறிவிப்பு வெளியாகலாம்” என்று பதிலளித்தார்.
தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது. இங்கு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தா.மோ.அன்பரசன் இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பணிச்சுமையால் பெண் இறப்பா?: மத்திய அரசு விசாரணை!
எனக்கு ஆட்சேபனை இல்லை… எடப்பாடிக்கு எதிரான வழக்கில் தயாநிதிமாறன் பதில்!