பணமதிப்பழிப்பு: நீதிபதி நாகரத்னா சரமாரிக் கேள்வி!

Published On:

| By Jegadeesh

demonetization

மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்பது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று(ஜனவரி 2) தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில் 4 நீதிபதிகள் பணமதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அவர் தனது தீர்ப்பில், “பணமதிப்பழிப்பு வழக்கில் மற்ற நீதிபதிகளின் தீர்ப்பிலிருந்து நான் மாறுபடுகிறேன்.

மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியின் முடிவை எடுப்பது ஏற்கத்தக்கதல்ல. பணமதிப்பழிப்பு முடிவை ரிசர்வ் வங்கியே பரிந்துரைக்க முடியும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எடுக்கப்படவில்லை. தரவுகளை பார்க்கும்போது ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படவில்லை என்பது தெரிகிறது.

மொத்த முடிவும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. சட்டம் இயற்றியோ அல்லது அவசர சட்டம் மூலமாகவோ மத்திய அரசு பண பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்திருக்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் பணமதிப்பழிப்பு போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடாது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை சட்ட விரோதமானது. ஆனால் முடிவை எடுத்துவிட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.

கலை.ரா

“செல்லாது என்று சொன்னது செல்லும்” – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

வித்தியாசமாக கேட்ச் பிடித்த வீரர்: வைரல் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.