கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500, 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இவற்றை நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராம சுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று(ஜனவரி 2) தீர்ப்பு வெளியானது.
அதில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பணமதிப்பு நீக்கம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
பணமதிப்பழிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே 6 மாதங்களாக ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய நடவடிக்கையைக் கொண்டுவர நியாயமான தேவை இருந்தது.
மத்திய அரசில் இருந்து முன்மொழியப்பட்டதால் மட்டுமே இந்த முடிவெடுக்கும் செயல்முறை தவறானது என்று கருத முடியாது. பிரிவு 26(2) ஆர்பிஐ சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீக்க முடியாது.
பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் மிகுந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். நிபுணத்துவத்துடன் இருக்கும் நிர்வாகத்தை நீதிமன்றம் அதன் ஞானத்துடன் மாற்ற முடியாது.
ஆர்பிஐ-ன் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசின் முடிவு, மையத்தின் அதிகாரங்களுக்கு எதிராக உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பைக் காட்டுகிறது.
ஆர்பிஐ சட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அரசுக்கு அதிகப்படியான அதிகாரப் பகிர்வு இருப்பதாகக் கூற முடியாது”. என்று கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி பி.வி.நாகரத்னா கூட “கறுப்புப் பணம், பயங்கரவாத நிதி மற்றும் கள்ளநோட்டு போன்ற நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் தீமைகளை குறிவைக்க பணமதிப்பு நீக்கம் என்பது நல்ல நோக்கத்தோடும், நன்கு சிந்தித்தும் எடுக்கப்பட்ட முடிவு என்று தான் கூறியுள்ளார்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்லி இளம்பெண் விபத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!
“அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி