ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று (மார்ச் 26) நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலையில், டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் சூரத் நீதிமன்றம் மார்ச் 23-ஆம் தேதி அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அடுத்த நாள் மார்ச் 24-ஆம் தேதி ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காந்தி சிலை அருகே சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்திருந்தது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் டெல்லி காவல்துறையினர் காங்கிரஸ் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கூறி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
ராஜ்கோட் பகுதியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
செல்வம்
இ-சேவை மையங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி இது தான்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்விஎம் 3 எம் 3 ராக்கெட்!