ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் காந்தி பேசியது குறித்து அவரிடம் டெல்லி போலீஸ் இன்று (மார்ச் 19) விசாரணை நடத்தியது.
காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்ற பாரத் ஜோடா யாத்திரையின் போது ராகுல் காந்தி, “யூனியன் பிரதேசங்களில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இது குறித்து பேச பல பெண்கள் என்னை அணுகியிருந்தனர்” என்று பேசியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு தொடர்பாக டெல்லி போலீஸ் மார்ச் 16 ஆம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அந்த நோட்டீஸில் “பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் டெல்லி போலீஸின் நோட்டீஸுக்கு ராகுல் காந்தி பதிலளிக்கவில்லை. இது குறித்து விசாரிப்பதற்காக டெல்லி சிறப்பு சிபி சாகர்ப்ரீத் ஹூடா மற்றும் டிசிபி பிரணவ் தயால் தலைமையில் போலீஸ் குழு ராகுல் காந்தி வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியது.
டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டிற்கு போலீஸ் சென்றுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மோனிஷா
இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!
சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!