போதைப்பொருள் கடத்தல் வழக்கில் என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (மார்ச் 19) உத்தரவிட்டுள்ளது.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட சென்னை மேற்கு மாவட்ட திமுக முன்னாள் அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் 9-ஆம் தேதி டெல்லியில் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் எடுத்து என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து நேற்று ஜாபர் சாதிக்கை சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையின் சென்னை மண்டல அலுவலகத்திற்கு என்சிபி அதிகாரிகள் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கும் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் மீண்டும் ஜாபர் சாதிக் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை இன்று நீதிபதி சுதிர் குமார் சிரோஹி முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, ஜாபர் சாதிக்கிற்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து டெல்லி சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிஏஏ சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
அண்ணாமலைக்கு எதிராக போட்டியா? பெண் தொழிலதிபர் விளக்கம்!