டெல்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று (பிப்ரவரி 3) மாலை 5 மணியோடு முடிவடைகிறது. Delhi needs Modi model : CBN
இந்த நிலையில் ஹை வோல்டேஜ் பிரச்சாரத்தை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறது பாஜக. பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று மட்டும் 22 ரோடு ஷோக்களை நடத்துகிறது பாஜக.
இதேநேரம் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையோடு தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆம் ஆத்மி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் நல்ல பலனை கொடுக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட நிர்வாகிகள்.
காங்கிரஸ் கட்சி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இழந்த ஆட்சியை மீட்டெடுக்க முடியுமா என்ற கேள்வியோடு களத்தில் உள்ளது.
ஏற்கனவே பாஜகவில் பல மாநிலங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் டெல்லியில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று பாஜக கூட்டணி முதலமைச்சர் ஆன ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக தடைபட்டு வரும் ஆம் ஆத்மி ஆட்சி தோல்வியுற்ற ஆட்சியாகும். இலவச மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி ஆம் ஆத்மி பேசுகிறது. ஆனால் அந்தத் திட்டங்களுக்கு அடிப்படையாக வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகளை ஆம் ஆத்மி அரசு சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை.
டெல்லி இன்று உலகத்தின் மிக மோசமான மாசடைந்த நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு காரணம் ஆம் ஆத்மி ஆட்சி தான். டெல்லிக்கு இப்போது நரேந்திர மோடி மாடல் ஆட்சி தான் தேவைப்படுகிறது’ என்று கூறியுள்ளார் சந்திரபாபு நாயுடு.