டெல்லி மாநகராட்சி தேர்தல்:அரவிந்த் கெஜ்ரிவாலின் திடீர் ட்வீட்!

அரசியல்

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று (நவம்பர் 4 ) காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆனால் காங்கிரஸ் 247 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளா். அதில்,”டெல்லியை சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கவும், ஊழலற்ற அமைப்பை உருவாக்கவும் இன்றைய தேர்தல் உதவியாக இருக்கும்.

நேர்மையான மற்றும் செயல்படும் வகையிலான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க இன்று உங்களின் வாக்குகளை செலுத்துங்கள் என ஒட்டுமொத்த டெல்லிவாசிகளுக்கும் கூறிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தூய்மையான மற்றும் குப்பையில்லா நகரத்திற்கு தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா,”காலநிலை நன்றாக இருக்கிறது. மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தினமும் காலையில் எழுந்திருக்கும்போது, கண்முன் இருக்கும் குப்பைக் குவியல்களை விட இந்தச் சிறிய சிரமத்தை எதிர்கொள்வது நல்லதுதான்” என்று தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் குப்பை முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நடிகை கிரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

“திமுக அரசு மீது மதத்தை வைத்து சிலர் குற்றம் சுமத்துகிறார்கள்”: முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.