two leaves symbol case tomorrow

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!

அரசியல்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக  தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 15) உத்தரவு பிறப்பிக்க உள்ளது. two leaves symbol case tomorrow

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்கள் தரப்பு எடப்பாடி பழனிசாமி மீது வழங்கிய புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு இன்று (மார்ச் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, புகழேந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக் வேணு,

”அதிமுக பொதுக்குழு தொடர்பாக மனுதாரர் வழங்கிய புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் தனது வாதத்தில், “அதிமுக கட்சியில் எந்த பிளவும் இல்லை. இந்த நிலையில் கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் எதன் அடிப்படையில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய முடியும்?

கடந்த 2022 ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதி மீறலும் இல்லை.

அதிமுக கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையுமில்லை. வீணாக பிரச்சனை செய்ய வேண்டுமென்றே புகழேந்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்” என்று வாதிட்டார். two leaves symbol case tomorrow

இதற்கிடையே தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அங்கித் அகர்வாலும், கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் வழங்கிய உத்தரவு நகலை இரு தரப்பும் இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி சச்சின் தத்தா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவற்றின் அடிப்படையில் நாளை இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நவாஸ் கனிக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

இரட்டை காதணி அல்லது இரட்டை மின்விளக்கு.. ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு!

GOLD RATE: நகைக்கடை பக்கமே போக முடியாது போல!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *