70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட டெல்லிக்கு இன்று (பிப்ரவரி 05) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. delhi exit poll result
இதில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.
பாஜக 68 இடங்களிலும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகியவை தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
27 ஆண்டுகளாக டெல்லியில் பாஜக ஆட்சியில் இல்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்தது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தல் மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில் 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை அந்தந்த ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில்,
சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ் delhi exit poll result
ஆம் ஆத்மி – 25-28
பாஜக – 39-44
காங்கிரஸ்- 2-3
பி -மார்க்
ஆம் ஆத்மி – 21-31
பாஜக – 39-49
காங்கிரஸ்- 0-2
ஜேவிசி
ஆம் ஆத்மி – 22-31
பாஜக – 39-45
காங்கிரஸ்- 0-2.
என்.டி.டி.வி
பாஜக – 35-40
ஆம் ஆத்மி -32-37
காங்கிரஸ்- 0-2
ரிபப்ளிக் டிவி delhi exit poll result
பாஜக – 31-43
ஆம் ஆத்மி – 32-37
காங்கிரஸ் – 0-2
இன்று வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு படி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். delhi exit poll result