டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 39 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா முன்னிலை வகிக்கிறார்.
கால்காஜி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை வகிக்கிறார். அதேபோல, ஜாங்புரா தொகுதியில் போட்டியிட்ட டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவும் பின்னடைவை சந்தித்துள்ளார். Delhi Election Kejriwal Atishi