டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 39 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 31 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் முன்னிலை வகிக்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தும் காங்கிரஸுக்கு கைகொடுக்கவில்லை.
இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2015, 2025 டெல்லி சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைமை நம்பிக்கை வைத்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. delhi election congress performing