டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 8) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி, பாஜக 42 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், இரண்டு சுற்றுக்கள் முடிவில் 254 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். கெஜ்ரிவால் 4,679 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங் 4,425 வாக்குகளும் பெற்றுள்ளனர். Delhi Election Bjp leading
கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அதிஷி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 4,238 வாக்குகளும், அதிஷி 3,089 வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 1,149 ஆகும்.