டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (பிப்ரவரி 5) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 1.56 கோடி வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். delhi election vote percentage
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் அதிஷி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
காலை 11 மணி நிலவரப்படி டெல்லியில், 19.95 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குசதவிகிதம் நிறைவடைகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. delhi election vote percentage