டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (ஜூன் 20) ஜாமீன் வழங்கியது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ஆம் தேதி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.
இந்தநிலையில், மதுபான ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விடுமுறைக்கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியும் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்டது மரக்காணம் சரக்கா? கன்னுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை விவரம்!