டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி 75 இடங்களில் வெற்றி!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் காலை 11.55 மணி வரை ஆம் ஆத்மி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் 709 பெண்கள் உட்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 7) நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.

காலை 10 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 125வார்டுகளில் முன்னிலையிலும், பாஜக 119 வார்டுகளிலும், காங்கிரஸ் 5வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது.

காலை 11.30 மணி நிலவரப்படி, 75 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டபோது 99 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது ஆம் ஆத்மி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பிறகு 11.55 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக 54 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது வரை 80 சதவிகித ஓட்டுகள் எண்ணப்பட்டு உள்ளன.

ஜெ.பிரகாஷ்

திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்

“விரைவில் அதிமுக பொதுக்குழு” – ஓ.பன்னீர்செல்வம்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts