277 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

அரசியல்

கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி எம்.எல்.ஏக்களை வாங்க ரூ.5,500 கோடி செலவிட்டுள்ளது பாஜக என டெல்லி முதல் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 26 ) பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “கடந்த சில ஆண்டுகளில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 277 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது.

1 எம்.எல்.ஏவுக்கு 20 கோடி வீதம், 277 எம்.எல்.ஏக்களுக்கு ரூ.5,500 கோடி வரை பாஜக செலவிட்டுள்ளது.

இந்த பணம் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை கவிழ்க்க ஆப்பரேஷன் தாமரை,

என்ற சதி திட்டத்தை பாஜக தீட்டியுள்ளதாகவும் கூறிய அவர் மேலும், டெல்லி சட்டசபையில் தமது அரசு நம்பிக்கை வாக்கு கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்லியின் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அனைத்து தேசவிரோத சக்திகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

எங்களுடையது மிகவும் பலமான அரசு, பாஜக எங்களை உடைக்க விரும்புகிறது. ஆனால் எங்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.

குஜராத் தேர்தல் வரை எங்கள் மீது பொய் வழக்குகளை புனைவார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ரூ.800 கோடி ஆபரேஷன் தாமரை தோல்வி: பாஜக மீது பாயும் ஆம் ஆத்மி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *